Iyyppan-18-saranams-tamil

சபரிமலை ஐயப்ப சுவாமி 18 சரண கோஷங்கள் – 18 types of Sarana gosham

சபரிமலை ஐயப்ப சுவாமி 18 சரண கோஷங்களால் வணங்குதல்

சபரிமலை ஐயப்ப சுவாமி வழிபாட்டின் முக்கிய அம்சமாக “சரண கோஷம்” கருதப்படுகிறது. பக்தர்களின் முழு அன்பையும், பரிபூரண சரணாகதியையும் காட்டும் இந்த கோஷங்கள், வழிபாட்டு முறையின் முக்கிய பகுதியாகும். ஐயப்ப பக்தர்கள் ஒருமித்து சரண கோஷங்களை முழங்குவதன் மூலம், அவர்கள் மனதார ஐயப்பனுடன் ஐக்கியமடைகின்றனர்.

சபரிமலை வழிபாட்டின் போது வணங்கப்படும் 18 வகையான சரண கோஷங்கள் பின்வருமாறு:

1) உறவுமுறைச் சரணம் :
ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
ஐங்கரன் ஸோதரனே சரணம் ஐயப்பா
ஷண்முகன் ஸோதரனே சரணம் ஐயப்பா

alayatra-membership1
2) பஞ்சபூத சரணம் :
மகர நட்சத்திரமே சரணம் ஐயப்பா ( ஆகாயம் )
காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ( நெருப்பு )
அழுதா நதியே சரணம் ஐயப்பா ( நீர் )
பம்பையின் தென்றலே சரணம் ஐயப்பா ( காற்று )
கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா ( நிலம் )

3) இடப்பெயர் சரணம் :
அச்சன்கோவில் அரசனே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா
குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
எரிமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா

4) அனுக்ரஹ சரணம் :
ஆபத்பாந்தவனே சரணம் ஐயப்பா
அனுக்ரஹ மூர்த்தியே சரணம் ஐயப்பா
அனாதரக்ஷகனே சரணம் ஐயப்பா
அழைத்தால் ஓடிவரும் அண்ணலே சரணம் ஐயப்பா

5) ப்ரிய சரணம் :
கற்பூர ப்ரியனே சரணம் ஐயப்பா
இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
சரணகோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
நெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
பாதயாத்திரை ப்ரியனே சரணம் ஐயப்பா
பானக ப்ரியனே சரணம் ஐயப்பா
பாயசன்ன ப்ரியனே சரணம் ஐயப்பா
நாம சங்கீர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா

6) காக்கும் சரணம் :
காத்து ரட்சிக்க வேண்டும் பகவானே சரணம் ஐயப்பா
ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
காவல் தெய்வங்களே சரணம் ஐயப்பா

7) நட்பு சரணம் :
வாவரின் தோழனே சரணம் ஐயப்பா
பெரிய கருப்பண்ண ஸ்வாமியே சரணம் ஐயப்பா
கடுத்த ஸ்வாமியே சரணம் ஐயப்பா

8) போற்றி சரணம் :
வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
குருவுக்கும் குருவே சரணம் ஐயப்பா

9) பிற தெய்வ சரணம் :
குருவாயூரப்பனே சரணம் ஐயப்பா
ஏத்தமானூர் அப்பனே சரணம் ஐயப்பா
சோட்டாணிக்கரை பகவதியே சரணம் ஐயப்பா

10) குண சரணம் :
உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
சற்குணசீலனே சரணம் ஐயப்பா

11) செயல் சரணம் :
ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா

Ayyppan-18-saranams-tamil
12) வெற்றி சரணம் :
மகிஷி மர்த்தனனே சரணம் ஐயப்பா
புலிப்பால் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
வெற்றியைத் தருபவனே சரணம் ஐயப்பா

13) பம்பை சரணம் :
பம்பையில் உதித்தவனே சரணம் ஐயப்பா
பம்பையில் ஸ்நானமே சரணம் ஐயப்பா
பம்பையில் சக்தியே சரணம் ஐயப்பா
பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா
பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

14) உருவ சரணம் :
யோக பட்டதாரியே சரணம் ஐயப்பா
சின்முத்ரா தாயகனே சரணம் ஐயப்பா
நித்ய ப்ரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
தத்வமஸி தாயகனே சரணம் ஐயப்பா

15) நீண்ட சரணம் :
ஸ்வாமியேய்ய்ய்ய்ய்ய்ய் சரணம் ஐயப்பா
ஜோதி ஸ்வரூபனே சரணம் ஐயப்பா

16) சாஸ்தா சரணம் :
பால சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஆதி சாஸ்தாவே சரணம் ஐயப்பா
பிரம்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா
விப்ர சாஸ்தாவே சரணம் ஐயப்பா
விஸ்வ சாஸ்தாவே சரணம் ஐயப்பா
விஜய சாஸ்தாவே சரணம் ஐயப்பா
மோஹன சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஞான சாஸ்தாவே சரணம் ஐயப்பா
யோக சாஸ்தாவே சரணம் ஐயப்பா
குபேர சாஸ்தாவே சரணம் ஐயப்பா
காள சாஸ்தாவே சரணம் ஐயப்பா
கிராத சாஸ்தாவே சரணம் ஐயப்பா
கல்யாண சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ருத்ர சாஸ்தாவே சரணம் ஐயப்பா
மகாராஜ சாஸ்தாவே சரணம் ஐயப்பா
சந்தான ப்ராப்தி சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஆர்ய சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஸ்ரீ தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா

17) பதினெட்டாம்படி சரணம் :
ஒன்னாம் திருப்படியே சரணம் ஐயப்பா
இரண்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா
மூன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா
நான்காம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஐந்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஆறாம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஏழாம் திருப்படியே சரணம் ஐயப்பா
எட்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஒன்பதாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பத்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினொன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பனிரெண்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதிமூன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதிநான்காம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினைந்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினாறாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினேழாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினெட்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா

18) மன்னிப்பு சரணம் :
ஸமஸ்தாபராத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
ஓம் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த ஸகல குற்றங்களையும் பிழைகளையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும் ஓம் ஸ்ரீ ஸத்யமான பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளிவீரன் வீரமணிகண்டன் காசி இராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீ ஹரிஹரசுதன் ஆனந்தசித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா.

ஓம் சாமியே சரணம் ஐயப்பா!

இந்த 18 சரண கோஷங்களின் மகத்துவம்

  • பக்தியின் ஆழத்தை வெளிப்படுத்தும் ஒரு வழி.
  • ஆன்மிக ஒற்றுமையையும் ஐயப்பனின் கருணையையும் பக்தர்களுக்கு பகிரும் முயற்சி.
  • இந்த கோஷங்கள் வழியாக பக்தர்கள் தமது அனைத்து சங்கடங்களையும் ஐயப்பனிடம் ஒப்படைக்கின்றனர்.

குறிப்பு

ஒவ்வொரு சரண கோஷமும், சபரிமலையின் ஆன்மிக சக்தியை உணர்த்தும் ஒரு சின்னமாகும். ஐயப்பனின் அருளைப் பெற இதை முழங்கும் போது உண்மையான பக்தியுடன் சொல்வது முக்கியம்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Copyright by ALAYATRA.COM