aarupadai-murugan-temple-timings

Arupadai veedu murugan temple list – Temple timings – Tour plan

Arupadai veedu Murugan temple list

நமது இந்து சமயதில் பல கடவுள்கள் இருந்தாலும் முருகன் வழிபாடு மிகவும் சிறப்பானது. தீமை செய்த அசுரனையும் வதம் செய்யாமல் மன்னித்து ஆட்கொண்ட கருணை பெருங்கடல் முருகப் பெருமான் நமது தமிழ் சமூகத்தின் கடவுள். இவர் மலையும் மலை மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலக் கடவுளாவார். எனவேதான் குன்றுகள் தோறும் குமரன் ஆலயங்கள் அமைந்துள்ளன. அவ்வாறு முருகன் கோவில் கொண்ட இடங்களில் சூரபத்மனை வதம் செய்த கந்த சஷ்டி புராணத்திற்கு தொடர்புடைய 6 திருத்தலங்களே அறுபடை வீடுகளாகும். தமிழ் புலவர் நக்கீரர் பெருமான், பாடல் இயற்றிப் பரிசு பெறும் பாணர் வகை புலவர்களை எங்குசென்றால் பொருளோடு அருளும் கிடைக்கும் என வழிகாட்டி ஆற்றுப்படுத்த நினைத்தார். எனவே திருமுருகாற்றுப்படை என்ற நூலை இயற்றியனார். இந்நூல் அள்ளி கொடுப்பதில் வல்லவரான வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல், வள்ளி மணாளன் முருகப்பெருமான் குடியிருக்கும் முக்கியமான 6 திருத்தலங்கள் பற்றி வரிசைப்படுத்தி பாடினார். திருமுருகாற்றுப்படை நூலில் குறிப்பிட்டுள்ள அந்த சிறப்புவாய்ந்த திருத்தலங்களே ஆற்றுப்படை வீடுகள் என்றழைக்கப்பட்டு பின் மறுவி ஆறுபடை வீடுகள் என மாறியது. ஆக அழியாத பொருளும் அருளும் அள்ளிதரும் வள்ளல் முருகப்பெருமானின் சன்னிதிதோறும் சென்று பணிந்து வணங்கிடுவோம். 

முருகனின் அறுபடை வீடுகள்

Six Abodes of Murugan (Arupadai Veedu) – Key Locations on Map

  1. Thiruparankundram Murugan Temple – near Madurai (hill temple)
  2. Tiruchendur Murugan Temple – on the seashore, Tuticorin district
  3. Palani Murugan Temple – on Palani Hills, Dindigul district
  4. Swamimalai Murugan Temple – near Kumbakonam
  5. Thiruthani Murugan Temple – hill temple near Chennai
  6. Pazhamudircholai Murugan Temple – near Madurai forest area

ஆலயாத்ரா அன்பர்களுக்கு அந்த ஆறுபடை வீடுகளில் முக்கிய தகவல்களை இப்பதிவில் தருவதில் உவகை கொள்கிறோம்.

alayatra-membership1

முருகனின் அறுபடை வீடுகள் எவை, எங்கு அமைந்துள்ளன, ஆலைய சிறப்பு என்ன, அத்தலங்களுடன் தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகள், வழிபாட்டு முறை, மற்றும் வழிபாட்டு பலன்கள் ஆகியவற்றை இப்பதிவில் சுருக்கமாக பார்க்கலாம். குறிப்பாக அறுபடை வீடு பயணம் மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் இங்கு துவங்கி எங்கு முடிக்க வேண்டும் பயணத்திற்கு திட்டமிடும் பொழுது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

arupadai-veedu-murugan-temple-history-in-tamil

முதலாம் படைவீடு: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில்

ஆலயம்: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில்

அமைவிடம்: திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்.

மூலவர்: சுப்பிரமணிய சுவாமி 

சிறப்பு : இது ஒரு குடைவரைக் கோயிலாகும். 

சூரபத்மனை வென்ற பிறகு தேவர்களின் தலைவனான இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணமுடித்து வைத்த தலம் இது. 

இங்குள்ள மூலவர் முருகன் மணக் கோலத்தில், அமர்ந்த நிலையில், தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.

இங்குள்ள மூலவர்கள் மலையிலேயே செதுக்கப்பட்டுள்ளனர்.

சிவன் (சத்தியகிரீஸ்வரர்), பார்வதி, விஷ்ணு, துர்க்கை, விநாயகர், முருகன் என பஞ்ச தெய்வங்களும் ஒரே குடைவரையில் அருள்பாலிப்பது வேறு எங்கும் காணக்கிடைக்காத சிறப்பு.

மூலவருக்கு விமானம் இல்லாததால், மலையையே (சிவன் வடிவமாக) விமானமாக வணங்குகின்றனர்.

பலன்: திருமண வரம், வேலைவாய்ப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் பெற இந்த முருகனை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

இரண்டாம் படைவீடு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

ஆலயம்: திருச்சீரலைவாய் சுப்பிரமணிய சுவாமி கோயில்

அமைவிடம்: திருச்செந்தூர், தூத்துக்குடி.

மூலவர்: சுப்பிரமணிய சுவாமி 

சிறப்பு: கடற்கரையில் அமைந்துள்ள ஒரே அறுபடை வீடு இது. சூரசம்ஹாரம் நிகழ்ந்த தலம். முருகன் அசுரனான சூரபத்மனை வதம் செய்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி தன்னுடன் வைத்துக்கொண்ட வெற்றிக்களம் இது.

போருக்குப் பின் முருகன் சிவபெருமானை இங்கு வழிபட்டார். கடற்கரையில் அமைந்திருந்தாலும், கருவறையின் உள்ளே ஒரு சிறிய சந்தன மலைக் குன்று உள்ளது. முருகன் குன்றின் மேலேயே உறைகிறார் என்பதைக் குறிக்கிறது.

இங்குள்ள முருகன், சூரசம்ஹாரத்திற்குப் பிறகு சிவபூஜை செய்யும் கோலத்தில் வேல் இல்லாமல் காட்சியளிக்கிறார். பின்புற சுவரில் வேல் உள்ளது.

கந்த சஷ்டி விழா இங்கு பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். இந்த விழாவின் போது சூரசம்ஹார நிகழ்வு நடத்தப்படும்.

பலன்: எதிரிகள் தொல்லை நீங்க, வழக்குகளில் வெற்றி பெற, திருமண வாய்ப்புகள் அமைய இங்கு வழிபடுவது சிறந்தது.

மூன்றாம் படை வீடு: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

ஆலயம்: திருவாவினன்குடி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

அமைவிடம்: பழனி 

திண்டுக்கல் மாவட்டம். 

மூலவர்: குழந்தை வேலாயுத சுவாமி 

சிறப்பு: ஞானப் பழத்திற்காக நடந்த போட்டியில் சினம் கொண்ட முருகப்பெருமான் மயில் மேல் ஏறி கயிலாயம் விட்டு வெளியேறி தென்பொதிகை மலைச் சாரலில் அமைந்துள்ள சரவணப்பொய்கை வந்து சேர்ந்தார். மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் குழந்தை வேலாயுத சுவாமியாக இங்கு காட்சி தருகிறார். இதுவே நக்கீரர் குறிப்பிடும் மூன்றாம் படை வீடான ஆதி பழனியாகும். மலை மேல் உள்ள நவபாஷாண மூலவர், பின்னாளில் 18 சித்தர்களில் ஒருவரான போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலை மீது அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள் (பஞ்சாமிர்தம், சந்தனம்) மருத்துவ குணங்கள் கொண்டவை.

மலை மீது ஏறுவதற்குப் படிக்கட்டுகள் சுமார் 690 உள்ளன. இது தவிர ரோப்கார் மற்றும் வின்ச் வசதிகள் உள்ளன. இங்கு

பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்துவது வழக்கம்.

பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பலன்: மன அமைதி, திருமணத் தடை நீக்கம், கல்வியில் முன்னேற்றம், தொழில் வளம் மற்றும் நோய்களில் இருந்து விடுதலை பெற இங்கு பக்தர்கள் வழிபடுகின்றனர்.

நான்காம் படைவீடு: சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்

ஆலயம்: திருவேரகம் சுவாமிநாத சுவாமி கோயில்.

அமைவிடம்: சுவாமிமலை

கும்பகோணம் மாவட்டம். 

மூலவர்: சுவாமிநாத சுவாமி 

சிறப்பு: தந்தை சிவபெருமானுக்கு ஓம்காரம் எனப்படும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்த தலம் இது. மலைக்கு 

கீழே உள்ள சிவபெருமான் சீடனைப் போல அமைந்திருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல 60 படிகள் உள்ளன. இவை 60 தமிழ் ஆண்டுகள் மற்றும் 60 சித்தாந்தத்தின் முக்கியக் கூறுகளைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.

முருகன் இங்கு வள்ளி மற்றும் தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

பலன்: கடன் தொல்லைகள் நீங்க, குழந்தை பாக்கியம், கல்வி மற்றும் ஞானம் பெற இங்கு வழிபடுவது சிறப்பு.

ஐந்தாம் படைவீடு: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்

ஆலயம்: குன்று தோறாடல் சுப்பிரமணிய சுவாமி கோயில்.

அமைவிடம்: திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்.

மூலவர்: சுப்பிரமணிய சுவாமி கோயில்.

சிறப்பு: சூரசம்காரம் முடிந்த பிறகு, முருகன் போர்க்கோபம் கோபம் தணிந்து அமைதி அடைந்த தலம் இது. முருகன், வள்ளி தேவியைத் திருமணம் செய்து கொண்ட தலம். மலை மீது அமைந்துள்ள இக்கோயிலுக்குச் செல்ல 365 படிகள் உள்ளன. இவை வருடத்தின் 365 நாட்களைக் குறிப்பதாக ஐதீகம்.

இங்கு நடைபெறும் ஆடி கிருத்திகை விழா மிக முக்கியமானதாகும்.

பலன்: திருமண வாய்ப்புகள் அமைய, தொழில் முன்னேற்றம், கடன் சுமைகள் நீங்கி மன அமைதி பெற இங்கு பக்தர்கள் வழிபடுகின்றனர்.

ஆறாம் படைவீடு: பழமுதிர்சோலை முருகன் கோயில்

ஆலயம்: பழமுதிர்சோலை முருகன் கோயில்

அமைவிடம்: பழமுதிர்சோலை

மதுரை மாவட்டம். 

மூலவர்: சுப்பிரமணிய சுவாமி 

சிறப்பு: அவ்வைக்கு ஞானம் அருளிய தலம்

முருகன் ஒரு சிறுவனாக வந்து, ஔவைப் பாட்டியிடம் “சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டு, அவருக்கு உலக ஞானத்தை உணர்த்திய திருவிளையாடல் நடந்த இடம் இது.

இங்குள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாறு தீர்த்தம் மிகச் சிறப்பு வாய்ந்தது. இது மகாவிஷ்ணுவின் பாதத்தில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. பக்தர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபடுகின்றனர்.

பலன்: கல்வியில் சிறந்து விளங்க, தொழில் வளம் பெருக மற்றும் மன அமைதி பெற இங்கு வழிபடுவது சிறப்பானது.

Arupadai veedu Murugan Temple Tour plan

முருகனின் அறுபடை வீடுகளையும் தடை இன்றி தரிசிக்க புவியியல் ரீதியாக அருகில் உள்ள கோயில்களை மிக சரியாக திட்டமிட வேண்டும். இந்த ஆறு கோயில்களும் தமிழ்நாடு முழுவதும் பரவி இருப்பதால் சொந்த வாகனங்களில் செல்லும் பக்தர்கள் 3 நாட்களிலும் பொதுப் போக்குவரத்தில் செல்பவர்கள் குறைந்தது 5 நாட்களிலும் பயணத்தை நிறைவு செய்யலாம்.

இந்த பக்திபயணத்தை திட்டமிடுவதற்கான ஒரு விரிவான வழிகாட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அறுபடை வீடு பயணத்தை திருதணிகையில் இருந்து தொடங்குவது மிகவும் எளிமையான திட்டமாக இருக்கும்.

திருத்தணி சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள. சென்னையில் சர்வதேச விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் இருப்பதால் வெளி நாடுகள் வெளி மாநிலங்களிள் 

இருந்து வருபவர்களுக்கும் இதுவே சிறந்த தொடக்கப் புள்ளியாக இருக்கும்.

arupadai-veedu-map-details

நாள் வாரியான பயண விவரம்:

நாள் 1 – திருத்தணி அதிகாலை தரிசனம். 

திருத்தணியில் இருந்து சுவாமி மலை 280 கி மீ (சுமார் 6 மணிநேர பயணம்) 

நாள் 1 – சுவாமிமலை மாலை தரிசனம். 

நாள் 2 – பழனியில் தங்கி இருந்து அதிகாலை 5.30மணி விஸ்வரூப தரிசனம் செய்வது மிக சிறப்பானது. 

(சுவாமிமலையில் இருந்து பழனி 253 கி மீ சுமார் 4 மணிநேர பயணம்) 

நாள் 2- திருப்பரங்குன்றம் தரிசனம் 11.00 மணி தரிசனம்.

 (பழனி to திருப்பரங்குன்றம் 118 கி மீ சுமார் இரண்டரை மணி நேர பயணம்)

நாள் 2 – பழமுதிர் சோலை – உச்சிவேளை தரிசனம். 

(திருப்பரங்குன்றம் to பழமுதிர்சோலை 16கி மீ சுமார் 40 நிமிட பயணம்)

நாள் 3- திருச்செந்தூரில் இரவு தங்கியிருந்து அதிகாலை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பானது. 

(பழமுதிர்சோலை திருச்செந்தூர் 210கி மீ சுமார் 4 மணிநேர பயணம்)

ஆறுபடை வீடு பயணத்திற்கான முக்கிய குறிப்புகள்

*ஆறுபடை வீடுகளை இணைக்கும் சாலைகள் பெரும்பாலும் நல்ல நிலையில் உள்ளன. பொதுப் போக்குவரத்தில் செல்லும் பக்தர்கள் பேருந்து அல்லது ரயில் நிலையங்களில் இருந்து அங்கங்கே வாடகை வாகனங்களை அமர்த்திக் கொள்வது மிகவும் வசதியாகவும் நேரத்தை வீணாக்காமல் இருக்க உதவும்.

*மலைக் கோயில்கள்: பழனி, சுவாமிமலை, திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகிய கோயில்கள் மலை மீது அமைந்துள்ளன. எனவே மலை ஏறுவதற்கும் இறங்குவதற்குமான நேரத்தை கருத்தில் கொண்டு திட்டமிடுதல் அவசியம். வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 மலைகோவில்களில் பழனியே சற்று உயரமானது. எனவே பழனியில் ரோப் கார், வின்ச் வசதியும் யானை பாதை வசதியும் உண்டு மற்ற இடங்களில் படிகளில் ஏறுவதற்கு இந்து அறநிலையத்துறை சார்பாக மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவை இயக்கத்தில் உள்ளனவா என்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

arupadai-murugan-temple-tour

Arupadai veedu Murugan temple timings

அறுபடை வீடு தரிசன நேரம்: ஒவ்வொரு கோயிலிலும் பெரும்பாலும் அதிகாலை 6.00 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும். விழாக்காலங்களில் மாறுதல்களுக்கு உட்பட்டது. துல்லியமான தகவல்கள் நமது தளத்தின் அறுபடைவீடு கோவில்களின் தனி பதிவுகளில் ஒருமுறை சரிபார்த்து திட்டமிடவும். 

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடற்கரையில் இருப்பதால், பயணத்தின்போது வெயில் அதிகமாக இருக்கும். காலையில் சீக்கிரமாக தரிசனம் முடிப்பது நல்லது.

ஆடை: அனைத்துக் கோயில்களிலும் பாரம்பரிய உடைகளே அனுமதிக்கப்படுகின்றன. ஆண்கள் வேட்டி, சட்டை, பெண்கள் சேலை, சுடிதார் அணிந்து செல்வது சிறந்தது. சில ஆலயங்களில் ஆண்கள் மேலாடை அணிய அனுமதி இல்லை. பெண்கள் துப்பட்டா அணிந்து வருவது கட்டாயம். தொலைபேசிகள் கட்டாயம் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் பணம் செலுத்தி மட்டுமே வாங்கமுடியும். பெரும்பாலான ஆலயங்களில் upi/epayment நடைமுறையில் இல்லை. 

ஆலயாத்ரா அன்பர்களின் அறுபடைவீடு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

alayatra-donate-support-banner

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Copyright by ALAYATRA.COM